dimanche 23 novembre 2008

இவர் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.1912 இல் யாழ்ப்பாணத்தில் மூன்று வாரகாலம் மார்க்க இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.அவ்வேளை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அசனாலெப்பைப் புலவரினால் யாழ்ப்பாண மக்களின் சார்பில் "வித்துவ தீபம்"என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். அட்டாவதானியாகவும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராகவும் விளங்கிய இவர் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் திரு பகுதா தந்தாதி,கண்டிக் கலம்பகம்,மெய்ஞ் ஞானக்குறவஞ்சி,கோட்டாற்றுப் புராணம்,கண்டிப் பதிற்றுப் பத்தந்தாதி,அருண்மொழி மாலை,முய்யித்தீன் ஆண்டகைக் காரணப் பிள்ளைத்தமிழ்,தைக்கா சாகிபு வலியுல்லா பிள்ளைத்தமிழ் ,சந்தத்திருப்புகழ்(நபிகள் நாயகத்தின் பேரில் பாடியது)சித்திர கவிப்புஞ்சம் என்பன குறீப்பிடத்தக்கனவாகும்.